General07 June 2026

பலாங்கொடை வியாபார நிலையத்தில் தீப்பரவல்!

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரின் தும்பகொடை பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் இன்று (07) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ வேகமாகப் பரவியதன் காரணமாக குறித்த வியாபார நிலையம் தீக்கிரையாகி பாரிய சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பலாங்கொடை நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன் மூலம் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படாத நிலையில், சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes