General08 June 2026

நாட்டின் பல இடங்களில் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல இடங்களில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மத்திய, சபரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், குறிப்பாக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes