இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான 'புள்ளி குறைப்பு முறைமை' (Demerit Points System) எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வீதிகளில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்தவும், சாரதி ஒழுக்கத்தை மேம்படுத்தவும் கடுமையான சட்ட அமுலாக்கம் அவசியம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் வீதி விபத்துக்கள் காரணமாக 2,750 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் உந்துருளி சாரதிகளும், பாதசாரிகளுமே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்திற்கும் (Driving Licence) 24 புள்ளிகள் வழங்கப்படும்.
போக்குவரத்து விதிகளை மீறும் போது இந்த புள்ளிகள் குறைக்கப்படும்.
தொடர்ச்சியாக தவறுகளை இழைத்து புள்ளிகளை இழக்கும் சாரதிகளின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்படும்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் (DMT) நிலவிய நிர்வாக சிக்கல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாகவே இந்த திட்டம் இதற்கு முன்னர் தாமதமடைந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போது அங்கு ஊழலை ஒழிக்கவும், வினைத்திறனை அதிகரிக்கவும் 'இ-மோட்டாரிங்' (e-Motoring) திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Latest News
நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை
Local
10 June 2026
சுரேஷ் சலே விவகாரம்: மருத்துவ அறிக்கையை கோரும் உத்தரவு இன்று
Local
10 June 2026
தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தால் திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு
Local
10 June 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் திடீர் வீழ்ச்சி : பின்னணி என்ன?
Local
10 June 2026
'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்!
Local
10 June 2026
சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும்; இல்லையேல் வடகிழக்கில் பாரிய போராட்டம் வெடிக்கும்: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எச்சரிக்கை
Local
10 June 2026
பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
Local
10 June 2026
போக்குவரத்து விதிகளில் வரப்போகும் பாரிய மாற்றம்!
Local
10 June 2026
ஈரான் மீது அதிரடித் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா!
Local
10 June 2026
கோட்டாபய உள்ளிட்டோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னரே இரைச்சல் அதிகரித்துள்ளது - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
10 June 2026