நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று, அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
Latest News
11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை
Local
10 June 2026
தேர்தலை ஒத்திவைத்தவர்களின் சிஸ்டத்தை மக்கள் மாற்றிவிட்டார்கள்! ரவிக்கு பிரதமர் ஹரிணி அதிரடிப் பதில்
Local
10 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை : முதலமைச்சர் விஜய் அறிவிப்பு (படங்கள் இணைப்பு)
Local
10 June 2026
எதிர்வரும் மாதம் முதல் இலங்கையில் எல் நினோ தாக்கம்: வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்
Local
10 June 2026
கல்கிஸ்சை காவல்துறை அதிகாரிக்கு எதிராக பரவும் செய்திகள் போலியானது: காவல்துறை விளக்கம்
Local
10 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜா இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி : குஷ்பு, ரேவதி உருக்கம்!
Local
10 June 2026
'டிட்வா' சூறாவளிப் பேரழிவு: தொடரும் அவலம் – தற்காலிக முகாம்களில் முடங்கியுள்ள 4 மாவட்ட மக்கள்!
Local
10 June 2026
எண்ணெய் விலை அதிகரிப்பு : இயற்கை எரிவாயு நிலவரம் என்ன?
Local
10 June 2026
நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை
Local
10 June 2026
சுரேஷ் சலே விவகாரம்: மருத்துவ அறிக்கையை கோரும் உத்தரவு இன்று
Local
10 June 2026