எதிர்வரும் மாதம் முதல் இலங்கையின் வானிலையில் ‘எல் நினோ’ (El Nino) காலநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த நிலைமையானது தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைக் காலநிலையின் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் முன்னதாக எல் நினோ நிலைமை உருவாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் பல்வேறு கட்டங்களாக சுமார் 11 மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் வானிலை நிலவரங்களில் எல் நினோ தாக்கத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (10) நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, பேரிடர் மேலாண்மை மையம், விவசாயத் திணைக்களம், விவசாய அபிவிருத்தித் திணைக்களம், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை என முக்கிய அமைப்புகள் உட்பட 20 பிரதான துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்
Latest News
பருத்தித்துறையில் காணாமல் போன சிறுவன் உடலமாக மீட்பு
Local
13 June 2026
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஆரம்பம்!
Local
13 June 2026
சுரேஷ் சலேயின் கைதால் புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சியடையப்போவதில்லை
Local
13 June 2026
இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து
Local
13 June 2026
நாட்டை மீண்டும் எங்களிடம் தாருங்கள், நடத்தி காண்பிப்போம் - மஹிந்த ராஜபக்ச சவால்!
Local
13 June 2026
பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
Local
13 June 2026
ஐந்து வயது மாணவியிடம் அத்துமீறியவர் கைது
Local
13 June 2026
களனிமுல்லையில் திருடப்பட்ட கொள்கலன் பாரவூர்தி அம்புல்கமவில் மீட்பு!
Local
13 June 2026
உலக வரலாற்றில் முதல் ட்ரில்லியனரானார் ஈலோன் மஸ்க்
Local
13 June 2026
சலேவைப் பார்க்க மனைவி இன்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு: உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது!
Local
13 June 2026