General10 June 2026

இலங்கை உட்பட 10 நாடுகளிலிருந்து மாத்திரம் வீட்டுப் பணியாளர்களைப் பெற்றுக் கொள்ள குவைத் அனுமதி

குவைத்தின் வீட்டுப் பணியாளர் துறையை ஒழுங்குபடுத்துவதற்கும், அதன் மீதான கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும் ஏதுவாக, வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பு தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை உள்ளிட்ட 10 அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மாத்திரம் வீட்டுப் பணியாளர்களைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 27 நாடுகளிலிருந்து பணியாளர்களைத் திரட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் மனிதவள பொது அதிகாரசபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், வியட்நாம், எத்தியோப்பியா, எரித்திரியா, பெனின், தென்னாப்பிரிக்கா, செனகல் ஆகிய நாடுகளிலிருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய முடியும்
Related recommendation
Hiru TV News | Programmes