General10 June 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், போதிய அல்லது நியாயமான காரணங்களின்றி தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

காவல்துறை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான வருண ஜயசுந்தர, இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதைக் கருத்திற்கொண்டே, இந்தத் தற்காப்பு சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes