General10 June 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிரான நிதித்தூய்தாக்கல் வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes