General11 June 2026

விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோரி இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 9ஆம் திகதி முதல் விண்ணப்பங் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதம் 22ஆம் திகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியூடாக இணையவழியில் மாத்திரம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes