International11 June 2026

ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீது இன்று இரவு அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறது. வெகு தொலைவில் இல்லாத எதிர்காலத்தில், நாம் கார்க் தீவு (Kharg Island) மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்புப் பகுதிகளைக் கைப்பற்றுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெனிசுவேலாவுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைப் போலவே, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் அமெரிக்கா ஏற்கும் என்றும், இந்த நடவடிக்கை வெனிசுவேலா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்த முறையில் பலனளித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related recommendation
Hiru TV News | Programmes