அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை ஒரு சாதாரண சந்தேகநபராகக் கருதி, அவருக்கான சட்டத்தின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது கனிவான அவதானத்தைச் செலுத்துவார் என நம்புவதாகத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் காட்டும் விசித்திரமான மௌனம் அல்லது பொறுப்பற்ற எதிர்வினைகளுக்கு மத்தியில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, பொறுப்புள்ள பிரஜைகளாகவும், ஒரு காலத்தில் இந்த நாட்டின் கொள்கை வகுப்பாளர்களாகவும் இருந்த தாங்கள், தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியின் அவதானத்தை ஈர்க்கத் தீர்மானித்ததாக அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சுரேஷ் சலே மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை நீதிமன்ற உத்தரவினால் அல்லாமல், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் படியே ஆகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதுவே தற்போதைய சமூக கலந்துரையாடலை எதிர்மறையான நிலைக்கு இட்டுச் சென்ற முதல் புள்ளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அவர் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாக எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லாமல், இரு புகழ்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணிகளே நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளனர் என அந்த கடிதத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ஜனாதிபதி சட்டத்தரணிகளின் வெளிப்படுத்தலுக்கு சட்டபூர்வமான மற்றும் விஞ்ஞானபூர்வமான அடிப்படையை வழங்கும் வகையில் சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரால் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் கடிதத்தின் மூலம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடக்குவதற்கு தங்களது குழுவினர் எண்ணவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்பாவியான பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவது எவ்விதத்திலும் தாமதிக்கக் கூடாது என்றும், அது ஜனாதிபதியின் முதன்மையான பொறுப்பு என்றும் தெரிவித்துள்ள அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதற்கான சட்ட நடவடிக்கைகள் குலம் சார்ந்த, அரசியல் கலப்பற்ற, நம்பகமானவையாக அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Latest News
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஆரம்பம்!
Local
13 June 2026
சுரேஷ் சலேயின் கைதால் புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சியடையப்போவதில்லை
Local
13 June 2026
இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து
Local
13 June 2026
நாட்டை மீண்டும் எங்களிடம் தாருங்கள், நடத்தி காண்பிப்போம் - மஹிந்த ராஜபக்ச சவால்!
Local
13 June 2026
பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
Local
13 June 2026
ஐந்து வயது மாணவியிடம் அத்துமீறியவர் கைது
Local
13 June 2026
களனிமுல்லையில் திருடப்பட்ட கொள்கலன் பாரவூர்தி அம்புல்கமவில் மீட்பு!
Local
13 June 2026
உலக வரலாற்றில் முதல் ட்ரில்லியனரானார் ஈலோன் மஸ்க்
Local
13 June 2026
சலேவைப் பார்க்க மனைவி இன்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு: உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது!
Local
13 June 2026
நாட்டில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு: கொள்ளளவை மீறும் மருத்துவமனைகள்
Local
13 June 2026