கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஆறாவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், இன்றைய தினமும் சுரேஷ் சலேவை நேரில் பார்ப்பதற்காக அவரது மனைவி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, கடந்த ஆறு நாட்களாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில், சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் பல தடவைகள் கடிதம் மூலம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தடுப்புக் காவலில் உள்ள தனது கணவரைச் சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குமாறு அவர் அந்தக் கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஆரம்பம்!
Local
13 June 2026
சுரேஷ் சலேயின் கைதால் புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சியடையப்போவதில்லை
Local
13 June 2026
இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து
Local
13 June 2026
நாட்டை மீண்டும் எங்களிடம் தாருங்கள், நடத்தி காண்பிப்போம் - மஹிந்த ராஜபக்ச சவால்!
Local
13 June 2026
பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
Local
13 June 2026
ஐந்து வயது மாணவியிடம் அத்துமீறியவர் கைது
Local
13 June 2026
களனிமுல்லையில் திருடப்பட்ட கொள்கலன் பாரவூர்தி அம்புல்கமவில் மீட்பு!
Local
13 June 2026
உலக வரலாற்றில் முதல் ட்ரில்லியனரானார் ஈலோன் மஸ்க்
Local
13 June 2026
சலேவைப் பார்க்க மனைவி இன்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு: உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது!
Local
13 June 2026
நாட்டில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு: கொள்ளளவை மீறும் மருத்துவமனைகள்
Local
13 June 2026