இலங்கையில் உள்ள பாடசாலை விடுதிகளில் பழுதடைந்த நிலையில் காணப்படும் 126 விடுதிக் கட்டிடங்களை நவீனமயமாக்குவதற்கான விசேட கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
எமது நாட்டுப் பாடசாலை விடுதிகளில் நிலவும் பின்வரும் குறைபாடுகள் காரணமாக, அங்கு தங்கியுள்ள மாணவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் கல்விச் செயலாற்றுகைகளுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
126 விடுதிக் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலைமையில் காணப்படல்.
அவற்றின் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படல்.
பௌதீக மற்றும் சுகாதாரநல வசதிகள் பற்றாக்குறையாக இருத்தல்.
முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்மை.
இதன் காரணமாக, இந்த விடுதிகளுக்குத் தேவையான வசதிகளை அவசரமாக நவீனமயப்படுத்தி, மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்குப் பொருத்தமான ஒரு தரப்பண்பான சூழலை உருவாக்க வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக 1,008 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்திட்டமானது 2026 – 2028 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் அமுல்படுத்தி முடிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் ஊடாக பாடசாலை விடுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கான பாதுகாப்பான மற்றும் சுகாதாரமிக்க தங்குமிட சூழல் உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தயா புஷ்ப குமாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
16 June 2026
கொலன்னாவ வெள்ளப் பாதிப்பு மற்றும் குழாய் வழிக் குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகள் : அமைச்சரவை அதிரடி முடிவு!
Local
16 June 2026
ஹேக்கர்கள் தொடர்பான காணொளிகளை வெளியிட்டால் ஹர்ஷ டி சில்வா பதவியிலிருந்து நீக்கப்படுவார்: ஆளுந்தரப்பு அச்சுறுத்துவதாக அஜித் பி. பெரேரா அம்பலம்
Local
16 June 2026
பாரம்பரிய ஊடகங்களை முந்திய சமூக வலைதளங்கள்: அதிர்ச்சி அறிக்கை!
Local
16 June 2026
முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்துக்கு!
Local
16 June 2026
அரசிறைப் பாதுகாப்புக் கட்டளைகளுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம்: ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை சம்மதம்
Local
16 June 2026
டிட்வாவினால் பாதிக்கப்பட்டோருக்கு விசேட திட்டம்: 200 டொலருக்கு அமைச்சரவை அனுமதி!
Local
16 June 2026
EPF மற்றும் ETF நிதியங்களை முத்தரப்புப் பேரவையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை
Local
16 June 2026
126 பாடசாலை விடுதிகளை நவீனமயமாக்க 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
Local
16 June 2026
டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட புனித தலங்களை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்: 90 இடங்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு
Local
16 June 2026