உலகளவில் பெரும்பாலான மக்கள் தற்போதைய செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கு, பாரம்பரிய ஊடகங்களை விட சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி தளங்களையே அதிகளவில் நாடுவதாக 'ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் செய்தி அறிக்கை 2026' தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 48 நாடுகளில், சுமார் 1,00,000 மக்களிடம் நடத்தப்பட்ட இணையவழி ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 54% பேர் செய்திகள் மற்றும் அன்றாடத் தகவல்களுக்காக சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி பகிர்வுத் தளங்களையே பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மாற்றம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே மிகத் தீவிரமாக உள்ளது.
அவர்கள் பாரம்பரிய செய்தி இணையதளங்கள், தொலைக்காட்சி அல்லது நாளிதழ்களைப் பார்ப்பதைத் தவிர்த்து காணொளிகள், சமூக வலைதள இன்ஃபுளூன்சர்கள் (Influencers) மற்றும் ஒன்லைன் ஆளுமைகள் மூலமாகவே செய்திகளை தேடுகின்றனர்.
நடப்பு நிகழ்வுகள் குறித்து பொதுமக்களின் புரிதலை உருவாக்குவதில், தனிநபர் உள்ளடக்க உருவாக்குநர்கள் (Creators) மற்றும் சுயாதீன பதிப்பகங்களின் (Independent Publishers) பங்கு முன்னெப்போதையும் விட வேகமாக அதிகரித்து வருகிறது.
செய்திகள் தேடுவதில் ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மாற்றம், ஊடகத்துறையில் சில முக்கிய கவலைகளையும் தோற்றுவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் செய்திகளில் உள்ள உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதில் உள்ள சவால்கள் மற்றும் போலியான செய்திகள் (Misinformation) பரவுவது போன்ற அச்சுறுத்தல்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடக நுகர்வு மற்றும் டிஜிட்டல் இதழியல் போக்குகள் குறித்து உலகளவில் மிக அதிகமாக மேற்கோள் காட்டப்படும் ஆய்வுகளில் ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கை முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6.3 மெக்னிடியூட் அளவில் அதிர்வு!
Local
16 June 2026
நுவரெலியா - வெலிமடை வீதியில் பாரிய விபத்து: 4 வாகனங்கள் சேதம்
Local
16 June 2026
நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை கேடயமாகப் பயன்படுத்தி பேச்சுரிமையை முடக்குவதாக காவல்துறைக்கு கண்டனம்!
Local
16 June 2026
நீர் விநியோகத்தடை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
Local
16 June 2026
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
16 June 2026
டெங்கு பரவலைத் தடுக்க பாடசாலைகளை தயார்படுத்தல்: கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை
Local
16 June 2026
மண்ணெண்ணெய்யில் இயங்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட கோரிக்கை!
Local
16 June 2026
வளைகுடாவிலிருந்து எண்ணெயைக் கடத்திச் செல்ல, ஈரானின் தந்திரத்தைப் பயன்படுத்தும் அமெரிக்கா
Local
16 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 'பிரதான சூத்திரதாரியை கண்டறிய சர்வதேச பின்னணி ஆராயப்பட வேண்டும் - அஜித் பி. பெரேரா
Local
16 June 2026
வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தயா புஷ்ப குமாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
16 June 2026