International16 June 2026

வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு - பலர் கைது!

வெள்ளை மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற யு.எஃப்.சி (UFC) தற்காப்புக் கலை விளையாட்டை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த சதி முயற்சியை முறியடித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, இந்த சதித் திட்டத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய பல நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் திட்டத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படவிருந்ததாகவும், அங்கு கூடியிருக்கும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் திட்டத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படவிருந்ததாகவும், அங்கு கூடியிருக்கும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes