General16 June 2026

SLASSCOM National Ingenuity Awards 2026 - ஹிரு தொலைக்காட்சிக்கு மீண்டும் விருது

SLASSCOM தேசிய புத்தாக்க விருதுகள் 2026 (SLASSCOM National Ingenuity Awards 2026) விருது வழங்கும் விழாவில் ஹிரு ஊடக நெட்வொர்க் தனது சிறப்பைப் பதிவு செய்துள்ளது.

இதில், மென்பொருள் புத்தாக்க தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பிற்கான தேசிய விருதை ஹிரு தொலைக்காட்சி வென்றுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அதே பிரிவிற்கான மாகாண விருதையும் ஹிரு ஊடக நெட்வொர்க் வென்றுள்ளது.

தொழில்நுட்பத் துறையில் மிக உயர்வாக மதிக்கப்படும் இந்த விருது வழங்கும் விழாவில், விருது பெற்ற ஒரேயொரு ஊடக நிறுவனம் ஹிரு என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes