தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் சிற்றூந்து ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பெண் தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் நுவரெலியா பகுதியிலுள்ள விடுதியொன்றிற்கு நேற்று முன்தினம் சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, குறித்த காதலன் அந்தப் பெண்ணின் உடலத்தை அன்றைய தினம் இரவே சிற்றூந்தில் ஏற்றி, நேற்று காலை தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த பெண்ணும் அவரது காதலனும் தங்கியிருந்த விடுதியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து குறித்த பெண்ணைத் தூக்கிச் சென்று சிற்றூந்தில் ஏற்றிச் சென்றதாக, விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அப்பெண்ணின் மூத்த சகோதரர் நுவரெலியா காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அதனடிப்படையில், நுவரெலியா தடயவியல் காவல்துறையினரின் உதவியுடன் குறித்த இருவரும் தங்கியிருந்த தனியார் விடுதியின் தடயங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள், மற்றும் தொலைபேசி அழைப்புத் தரவுகளைச் சேகரித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
Latest News
பதுளை - நானுஓயா தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
Local
20 June 2026
உலக சந்தையில் விலை குறைந்தாலும் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது
Local
20 June 2026
கட்டார் வழங்கிய சொகுசு வானூர்தி: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகம்
Local
20 June 2026
அமெரிக்க - ஈரான் பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்து பயணம்!
Local
20 June 2026
வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி: அமெரிக்கா மீது ஈரான் கால்பந்து சம்மேளனம் குற்றச்சாட்டு
Local
20 June 2026
காலி - அக்குரஸ்ஸ பிரதான வீதியில் திடீரென தீப்பற்றியெரிந்த உந்துருளி!
Local
20 June 2026
கச்சத்தீவை மீட்பது புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல – சென்னையில் ரவூப் ஹக்கீம் திட்டவட்டம்!
Local
20 June 2026
சென்னையில் போலி ஆவணங்களுடன் பெண்ணுடன் தங்கியிருந்த யாழ். இளைஞர் கைது!
Local
20 June 2026
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
20 June 2026
பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பாடசாலை உணவகங்களில் துரித உணவுகளுக்கு அதிரடித் தடை
Local
20 June 2026