General19 June 2026

தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி

கால்பந்து தொடரின் குழு A பிரிவுக்கான லீக் போட்டியில், தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெறுவதை உறுதி செய்துள்ளது.

குவாடலஜாரா (Guadalajara) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

எனினும், ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் மெக்சிகோவின் ஜூலியன் குய்னோனஸ் அடித்த பந்தை தென் கொரிய கோல்கீப்பர் கிம் சேங்-கியூ சாதுரியமாக தடுத்தார்.

அதனை தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கி 50ஆவது நிமிடத்தில், தென் கொரிய கோல்கீப்பர் பந்தைக் கட்டுப்படுத்தத் தவறிய சமயம், மெக்சிகோ வீரர் லூயிஸ் ரோமோ (Luis Romo) பந்தை கோலாக மாற்றி தனது அணிக்கு 1-0 என முன்னிலை பெற்று கொடுத்தார்.

ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் நட்சத்திர வீரர் சன் ஹியுங்-மின் (Son Heung-min) மாற்றப்பட்டு மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில்தென் கொரியா கடுமையான அழுத்தத்தை கொடுத்தது. குறிப்பாக 87ஆவது நிமிடத்தில் சோ குவே-சுங் (அடித்த ஹெடரை மெக்சிகோ கோல்கீப்பர் ரவுல் ரான்கெல் மிக அற்புதமாக தடுத்து இரட்டை சேவ் செய்து மெக்சிகோவின் வெற்றியை உறுதி செய்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes