பிரித்தானிய உயிரியல் பூங்காவில் 3 வயது சிறுவன் முதலை கூண்டுக்குள் வீழ்ந்து படுகாயமடைந்த சம்பவத்தை அடுத்து, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் 30 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் அமைந்துள்ள 'ஜொன்சன்ஸ் ஒஃப் ஓல்ட் ஹர்ஸ்ட்' (Johnsons of Old Hurst) உயிரியல் பூங்காவில், பிற்பகல் 1:24 மணியளவில் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3 வயது சிறுவன் ஒருவன் முதலைகள் இருக்கும் கூண்டுக்குள் விழுந்துள்ளதாக காவல்துறைக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், முதலை கூண்டிற்குள் இருந்த சிறுவனை மீட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
படுகாயமடைந்த அந்த சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக நோர்போக் (Norfolk) பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் கைது செய்யப்பட்ட நபருக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தீவிர குற்றவியல் வழக்காகப் பதிவு செய்து காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பூங்காவின் குறிப்பிட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Latest News
பெண் காவல்துறை கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி: அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
Local
19 June 2026
நீதிமன்றத் தடைக்கு மத்தியில் செம்மணியில் மாபெரும் போராட்டம்
Local
19 June 2026
ஆசனப் பட்டிகளுக்கான 3 மாத சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு: சோதனையின் போது சிக்கிய பேருந்து பயணிகள்!
Local
19 June 2026
எல்பிட்டிய பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் தீப்பரவல்
Local
19 June 2026
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் ஐசிசி தலைவர் ஜெய் ஷா
Local
19 June 2026
உயிர்த்த தாக்குதல் விசாரணை: FBI அறிக்கை எங்கே? ஐக்கிய தேசிய கட்சி கேள்வி
Local
19 June 2026
'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட மரணம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
Local
19 June 2026
சவக்காரத்துக்கு வரி, சூதாட்ட நிறுவனங்களுக்கு சலுகையா? – ஹர்ஷ டி சில்வா கேள்வி!
Local
19 June 2026
அம்பலாங்கொடையில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்!
Local
19 June 2026
எரிபொருள் மானியம் நீக்கப்பட்டால் வாழ்க்கைச் செலவு 11 வீதத்தால் அதிகரிக்கும்!" – ஐ.எம்.எப் அதிகாரியிடம் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை
Local
19 June 2026