General19 June 2026

ஆசனப் பட்டிகளுக்கான 3 மாத சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு: சோதனையின் போது சிக்கிய பேருந்து பயணிகள்!

ஆசனப் பட்டிகள் (Seat belts) இல்லாத வாகனங்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த மூன்று மாத சலுகைக் காலம் இன்றுடன் (19) நிறைவடைந்துள்ளது.

இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலையின் (Southern Expressway) கெலனிகம நுழைவாயிலினூடாக (Galanigama entrance) நுழைவதற்காக வருகை தந்த தனியார் வாகனங்கள் மற்றும் பயணியர் பேருந்து வண்டிகளில் ஆசனப் பட்டிகளை அணிந்துள்ளனரா என்பது குறித்த விசேட சோதனை நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பாணந்துறையிலிருந்து கடுவலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து வண்டியொன்றில் பயணித்த 33 பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிந்திருக்கவில்லை என்பது காவல்துறை அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த காவல்துறையினரால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிகை எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes