General19 June 2026

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது மோதல்: 4 காவல்துறையினர் காயம், நால்வர் கைது

தெரணியகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில் 4 காவல்துறையினர் காயமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவிசாவளை பிராந்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஹம்பானவெல பகுதியில் சிவில் உடையில் சென்ற காவல்துறை குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களை கைது செய்ய முயன்ற வேளையில், அங்கிருந்த சிலர் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த மோதலில் காயமடைந்த 4 காவல்துறையினர் சிகிச்சைக்காக அவிசாவளை மற்றும் தெரணியகலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை பிரிவு III உதவி காவல்துறை அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான சுயாதீன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தெரணியகலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இத்தகைய சம்பவங்களால் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முடங்கிவிடாது என்றும், அந்த பகுதியில் தொடர்ந்து இவ்வாறான சோதனைகள் முன்னெடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes