International21 June 2026

வீட்டிற்குள் புகுந்த டெஸ்லா சிற்றூந்து : மூதாட்டி பரிதாபமாக பலி!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அதிவேகமாக வந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து ஒன்று, அங்குள்ள வீடு ஒன்றின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் கோர விபத்து நிகழும்போது, குறித்த வீட்டிற்குள் வசித்து வந்த 76 வயதுடைய மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் தொழில்நுட்ப சிற்றூந்துகள் இவ்வாறான விபத்துக்குள்ளான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes