General23 June 2026

WhatsApp நிறுவனத்தின் தலைவர் திடீர் விலகல் - புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் இந்தியர் யார் தெரியுமா?

தொழில்நுட்ப உலகில் ஒரு முக்கிய திருப்பமாக, WhatsApp நிறுவனத்தின் தலைவர் வில் கேத்கார்ட் (Will Cathcart) தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
கடந்த ஏழு ஆண்டுகளாக WhatsApp தளத்தை வழிநடத்தி, உலகளவில் அதன் பயனர்களின் எண்ணிக்கையை 300 கோடிக்கும் மேலாக உயர்த்திய பெருமை இவருக்கு உண்டு.

WhatsApp தற்போது மிக வலுவான நிலையில் உள்ளதால், இதிலிருந்து பின்வாங்குவதற்கு இதுவே சரியான தருணம் என அவர் தெரிவித்துள்ளார்.

வில் கேத்கார்ட் விலகலையடுத்தது, இந்திய நிதித் தொழில்நுட்ப (Fintech) நிறுவனமான ‘கிரெட்’ (Cred)-இன் நிறுவனர் குணால் ஷா (Kunal Shah) WhatsApp செயலியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இது குறித்து மெட்டா (Meta) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், "இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றை குணால் ஷா உருவாக்கியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய செய்திப் பரிமாற்ற செயலியை வழிநடத்துவதற்கு அவரது உலகளாவிய பார்வையும், புதியவற்றை உருவாக்கும் சிந்தனையும் பெரிதும் உதவும்" எனப் பாராட்டியுள்ளார்.

பெங்களூரைத் தளமாகக் கொண்ட ‘கிரெட்’ நிறுவனத்தில் மெட்டா நிறுவனம் 900 மில்லியன் டொலர்களை முதலீடு செய்து, அதன் 20 சதவீதப் பங்குகளைப் பெறவுள்ளதாகவும், எனினும் பயனர்களின் தரவுகளுக்கு மெட்டா நிறுவனத்திற்கு அனுமதி இருக்காது என்றும் குணால் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியாவில் மட்டும் சுமார் 85 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள WhatsApp நிறுவனம், விளம்பரங்கள், கட்டணச் சேவைகள் மற்றும் AI கருவிகள் மூலம் தனது வருவாயைப் பெருக்கத் திட்டமிட்டு வரும் நிலையில், இந்த தலைமை மாற்றம் மெட்டா நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes