General23 June 2026

கால்பந்து உலகக் கிண்ணம் - வரலாறு படைத்தார் லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் Group J இற்கான லீக் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரியா அணிகள் மோதின.

இந்த விறுவிறுப்பான போட்டியின் 39ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக ஒரு அற்புதமான கோலை அடித்தார்.

இதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் தனது 17ஆவது கோலைப் பதிவு செய்து, உலகக் கிண்ண தொடர்களில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

தற்போது 38 வயதாகும் லியோனல் மெஸ்ஸி, இந்த வரலாற்று சாதனை மூலம் சர்வதேச கால்பந்து உலகில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.


Related recommendation
Hiru TV News | Programmes