உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரக தெரிவிக்கையில், உலக சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அமெரிக்க - ஈரான் போருக்கு முன்னர் காணப்பட்ட மட்டத்திற்கு இன்னும் குறைவடையவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க மற்றும் ஈரான் ஜனாதிபதிகளுக்கு இடையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் எட்டப்பட்ட பூர்வாங்க அமைதி உடன்படிக்கையை அடுத்து, உலகளாவிய மசகு எண்ணெய் விலை தற்போது கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்று (22) நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.18 டொலராகவும், WTI வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.29 டொலராகவும் பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்ததன் நன்மையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஏற்கனவே எரிபொருள் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.
இருப்பினும், உலக சந்தையின் தற்போதைய விலை நிலவரம் உள்நாட்டு சந்தையில் விலைக்குறைப்பை ஏற்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை என இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.
Latest News
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயது யுவதி கைது
Local
24 June 2026
எரிசக்தி சந்தையில் மாற்றம் : மசகு எண்ணெய் விலையில் சரிவு - இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
Local
24 June 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 35 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல்
Local
24 June 2026
கல்வித் துறையில் அதிரடி மாற்றம் : பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை காண பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
Local
24 June 2026
பனாமாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி!
Local
24 June 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!
Local
24 June 2026
தெல்தெனியவில் உடலமாக மீட்கப்பட்ட இயன்முறை சிகிச்சையாளரின் சந்தேகத்திற்குரிய காதலன் யாழ்ப்பாணத்தில் கைது!
Local
24 June 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
24 June 2026
இலங்கை வான்படைக்கு உலங்கு வானூர்திகளை கையளித்த அமெரிக்க அரசு!
Local
24 June 2026
GIT 2026 பரீட்சைக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்: தரம் 12 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Local
24 June 2026