Top Story
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் வானூர்தி நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வருஷஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (25) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக் கட்டா, காவல்துறையினரால் இல்லாமல் ஆக்கப்படுவதைத் தடுப்பதற்காகவும், தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி காலி பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றாக வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும், புலனாய்வு நடவடிக்கைகளிலிருந்து அவரை விடுவிப்பதற்கும் உதவுவதாகக் கூறி கையூட்டல் கோரப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதற்காக, கடந்த 2023ஆம் ஆண்டு டுபாயில் வைத்து, 'ஹரக் கட்டா'வின் மனைவியான மதுஷிகா மதுவந்தி என்பவரிடம் சந்தேகநபர்கள் கையூட்டல் கோரியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களினால் சந்தேகநபரின் மனைவியிடமிருந்து ஆரம்பத்தில் 50 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.

பின்னர் அந்தத் தொகை 20 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு, அதில் முன்பணமாக 12 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபரங்களுக்கு
General25 June 2026
விஜயதாசவின் மகன் ரகித மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது
Live Football Scores
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

மின்சார செலவைக் குறைக்க புதிய முயற்சி - துறைமுகத்தை வந்தடைந்த 7 மின்கல அமைப்புகள்

General 26 June 2026
 மின்சார செலவைக் குறைக்க புதிய முயற்சி - துறைமுகத்தை வந்தடைந்த 7 மின்கல அமைப்புகள்

மூடப்படும் அபாயத்தில் சூரியசக்தி நிறுவனங்கள்! அரசாங்கத்தின் மந்தமான போக்கை சாடிய தயாசிறி ஜெயசேகர

General 26 June 2026
மூடப்படும் அபாயத்தில் சூரியசக்தி நிறுவனங்கள்! அரசாங்கத்தின் மந்தமான போக்கை சாடிய தயாசிறி ஜெயசேகர

சூரியசக்தி நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்: ஒரு மாத கால அவகாசம் வழங்கிய வலுசக்தி அமைச்சர்!

General 26 June 2026
சூரியசக்தி நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்: ஒரு மாத கால அவகாசம் வழங்கிய வலுசக்தி அமைச்சர்!

உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களை நிரப்ப வலியுறுத்தல் – எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்ப சேகரிப்பு

General 26 June 2026
உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களை நிரப்ப வலியுறுத்தல் – எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்ப சேகரிப்பு

நாட்டில் டெங்கு அதிகரிப்பு: அரசாங்கத்தை எச்சரிக்கும் சஜித் பிரேமதாச!

General 26 June 2026
நாட்டில் டெங்கு அதிகரிப்பு: அரசாங்கத்தை எச்சரிக்கும் சஜித் பிரேமதாச!

சரித் அபேசிங்கவின் கட்சிப் பதவிகளை நீக்குவதற்கு தீர்மானம்

General 26 June 2026
சரித் அபேசிங்கவின் கட்சிப் பதவிகளை நீக்குவதற்கு தீர்மானம்
International News

வெப்ப அலை உச்சம் - பிரான்ஸில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு

International 26 June 2026
வெப்ப அலை உச்சம் - பிரான்ஸில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு

வெனிசுவேலா நிலநடுக்கம் - பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

International 26 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம் - பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை - ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு- மீறினால் உடைத்து நொறுக்கப்படும்!

International 26 June 2026
ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை -  ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு- மீறினால் உடைத்து நொறுக்கப்படும்!

22 ஆண்டுகால நல்லவர் வேடம் கலைந்தது - கின்னஸ் புத்தகத்தில் WWE ஜாம்பவான் ஜோன் சீனா!

International 26 June 2026
22 ஆண்டுகால நல்லவர் வேடம் கலைந்தது - கின்னஸ் புத்தகத்தில் WWE ஜாம்பவான் ஜோன் சீனா!

ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை: பிரான்ஸில் உச்சக்கட்ட வெப்பநிலை பதிவு

International 25 June 2026
ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை: பிரான்ஸில் உச்சக்கட்ட வெப்பநிலை பதிவு

வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு, 700க்கும் அதிகமானோர் காயம்

International 25 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு, 700க்கும் அதிகமானோர் காயம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பாரிய வீழ்ச்சி

International 25 June 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பாரிய வீழ்ச்சி

எண்ணெய் விலையில் தொடரும் வீழ்ச்சி – உலக சந்தையில் புதிய மாற்றம்

International 25 June 2026
எண்ணெய் விலையில் தொடரும் வீழ்ச்சி – உலக சந்தையில் புதிய மாற்றம்

"கணவனை தேடும் மனைவி கதை" : இன்பநிதியின் இன்ஸ்டா பதிவால் சர்ச்சை!

International 24 June 2026
"கணவனை தேடும் மனைவி கதை" : இன்பநிதியின் இன்ஸ்டா பதிவால் சர்ச்சை!

மெட்டாவின் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?

International 24 June 2026
மெட்டாவின் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க செனட் சபையின் வாக்கெடுப்பு அர்த்தமற்றது : ட்ரம்ப் குற்றச்சாட்டு!

International 24 June 2026
அமெரிக்க செனட் சபையின் வாக்கெடுப்பு அர்த்தமற்றது : ட்ரம்ப் குற்றச்சாட்டு!

எரிசக்தி சந்தையில் மாற்றம் : மசகு எண்ணெய் விலையில் சரிவு - இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

International 24 June 2026
எரிசக்தி சந்தையில் மாற்றம் : மசகு எண்ணெய் விலையில் சரிவு - இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!

International 24 June 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!

ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது: ஈரான் ஜனாதிபதி அதிரடி

International 23 June 2026
ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது: ஈரான் ஜனாதிபதி அதிரடி

இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஓமான் மற்றும் ஈரான் கூட்டாக அறிவிப்பு

International 23 June 2026
இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஓமான் மற்றும் ஈரான் கூட்டாக அறிவிப்பு
More News
General26 June 2026

சாவகச்சேரி உப தவிசாளர் நீக்கம் - நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (26)முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்க சாவகச்சேரி வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் விசாரணைப் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் மற்றும் வவுனியா மாநகர சபையின் மேயர் காண்டீபன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள சாவகச்சேரி வர்த்தகர் சங்கம், குறித்த பதவி நீக்கம் நியாயமற்றதும் தன்னிச்சையானதுமாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு நீதியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அத்துடன், சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் உணவகங்களையும் முழுமையாக மூடி எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.மண்ணின் உரிமை மற்றும் நீதிக்காக முன்னெடுக்கப்படும் இந்த அறப்போராட்டத்திற்கு இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் சாவகச்சேரி வர்த்தகர்கள் கோரியுள்ளனர்.

விபரங்களுக்கு
சாவகச்சேரி உப தவிசாளர் நீக்கம் - நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அழைப்பு
General26 June 2026

தங்காலை - மாத்தறை வீதியில் பேருந்து விபத்து: 12க்கும் மேற்பட்டோர் காயம்

தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபரங்களுக்கு
தங்காலை - மாத்தறை வீதியில் பேருந்து விபத்து: 12க்கும் மேற்பட்டோர் காயம்
General26 June 2026

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால, இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றத்தைக் கருத்தில் கொண்ட பின்னரே, கட்டண உயர்வு தொடர்பான சதவீதங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
General26 June 2026

தெல்தெனிய சம்பவம் - குண்டசாலை பொறுப்பதிகாரி கைது

பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபருக்கு உதவிய மற்றும் ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் குண்டசாலை காவல்துறை பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபரங்களுக்கு
தெல்தெனிய சம்பவம் - குண்டசாலை பொறுப்பதிகாரி கைது
General26 June 2026

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்

நாட்டில் இன்று (26) பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.அதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இதேவேளை ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்
International News

வெப்ப அலை உச்சம் - பிரான்ஸில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு

International 26 June 2026
வெப்ப அலை உச்சம் - பிரான்ஸில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு

வெனிசுவேலா நிலநடுக்கம் - பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

International 26 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம் - பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை - ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு- மீறினால் உடைத்து நொறுக்கப்படும்!

International 26 June 2026
ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை -  ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு- மீறினால் உடைத்து நொறுக்கப்படும்!

22 ஆண்டுகால நல்லவர் வேடம் கலைந்தது - கின்னஸ் புத்தகத்தில் WWE ஜாம்பவான் ஜோன் சீனா!

International 26 June 2026
22 ஆண்டுகால நல்லவர் வேடம் கலைந்தது - கின்னஸ் புத்தகத்தில் WWE ஜாம்பவான் ஜோன் சீனா!

ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை: பிரான்ஸில் உச்சக்கட்ட வெப்பநிலை பதிவு

International 25 June 2026
ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை: பிரான்ஸில் உச்சக்கட்ட வெப்பநிலை பதிவு

வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு, 700க்கும் அதிகமானோர் காயம்

International 25 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு, 700க்கும் அதிகமானோர் காயம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பாரிய வீழ்ச்சி

International 25 June 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பாரிய வீழ்ச்சி

எண்ணெய் விலையில் தொடரும் வீழ்ச்சி – உலக சந்தையில் புதிய மாற்றம்

International 25 June 2026
எண்ணெய் விலையில் தொடரும் வீழ்ச்சி – உலக சந்தையில் புதிய மாற்றம்

"கணவனை தேடும் மனைவி கதை" : இன்பநிதியின் இன்ஸ்டா பதிவால் சர்ச்சை!

International 24 June 2026
"கணவனை தேடும் மனைவி கதை" : இன்பநிதியின் இன்ஸ்டா பதிவால் சர்ச்சை!

மெட்டாவின் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?

International 24 June 2026
மெட்டாவின் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க செனட் சபையின் வாக்கெடுப்பு அர்த்தமற்றது : ட்ரம்ப் குற்றச்சாட்டு!

International 24 June 2026
அமெரிக்க செனட் சபையின் வாக்கெடுப்பு அர்த்தமற்றது : ட்ரம்ப் குற்றச்சாட்டு!

எரிசக்தி சந்தையில் மாற்றம் : மசகு எண்ணெய் விலையில் சரிவு - இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

International 24 June 2026
எரிசக்தி சந்தையில் மாற்றம் : மசகு எண்ணெய் விலையில் சரிவு - இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!

International 24 June 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!

ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது: ஈரான் ஜனாதிபதி அதிரடி

International 23 June 2026
ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது: ஈரான் ஜனாதிபதி அதிரடி

இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஓமான் மற்றும் ஈரான் கூட்டாக அறிவிப்பு

International 23 June 2026
இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஓமான் மற்றும் ஈரான் கூட்டாக அறிவிப்பு
Sports Stories
Explore More
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இலங்கை அணி 308 ஓட்டங்கள் குவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இலங்கை அணி 308 ஓட்டங்கள் குவிப்பு

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவின் போது, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி விக்கட் இழப்பின்றி ஓட்டங்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை. முன்னதாக, இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 308 ஓட்டங்களை பெற்றிருந்தது இதில் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மிகச்சிறப்பாக விளையாடி 168 பந்துகளில் 120 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார். ஏனைய வீரர்களில் தினேஷ் சந்திமால் 54 ஓட்டங்களையும் சொனால் தினூஷ 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

விபரங்களுக்கு
சமநிலையில் முடிவடைந்த ஜப்பான் - சுவீடன் போட்டி

சமநிலையில் முடிவடைந்த ஜப்பான் - சுவீடன் போட்டி

கால்பந்து கிண்ணத் தொடரின் 'F' குழுவுக்கான லீக் போட்டியில் ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகளுக்கு இடையிலான போட்டி , 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.இந்த போட்டியில் இரு நாட்டு வீரர்களும் ஆரம்பம் முதலே வெற்றியை இலக்காகக் கொண்டு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜப்பான் அணி நுணுக்கமான நகர்வுகள் மூலம் கோல் அடிக்க முயன்ற நிலையில், சுவீடன் அணி வலுவான தற்காப்பு மற்றும் வேகமான எதிர் தாக்குதல்களை முன்னெடுத்தது.போட்டியின் பெரும்பகுதி விறுவிறுப்பாக அமைந்தாலும், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டத்தினால் மேலதிக கோல்கள் எதையும் பெற முடியவில்லை.இரு தரப்பு வீரர்களும் ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை வெற்றிக்காக கடுமையாகப் போராடிய போதிலும், வெற்றியைத் தீர்மானிக்கும் கோல் கிடைக்காததால், இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டமையினால் போட்டி சமநிலையில் முடிந்தது.

விபரங்களுக்கு
ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருது!

ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருது!

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மாவுக்கு, இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், இந்தியாவின் மிக உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. புதுடில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜூன் 23, 2026 அன்று நடைபெற்ற இரண்டாவது சிவில் முதலீட்டு விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதினை ரோகித் சர்மாவுக்கு வழங்கினார். கிரிக்கெட் விளையாட்டில் அவர் காட்டிய தொடர்ச்சியான திறமை, தலைமைத்துவம் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் நவீன வெற்றிகளில் அவர் ஆற்றிய முக்கிய பங்கு ஆகியவற்றிற்காக இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி 2024 சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் 20க்கு 20 உலகக்கிண்ணத்தை வென்றது. அத்துடன், 2025 ஆம் ஆண்டு செம்பியன்ஸ் கிண்ண வெற்றியிலும் முக்கிய பங்காற்றி. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் (264) மற்றும் மூன்று இரட்டைச் சதங்கள(209,264,208) பெற்ற உலக சாதனையாளராக அவர் திகழ்கிறார். இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் விழாவில், ரோகித் சர்மாவுடன் சேர்த்து விளையாட்டுத் துறையில் பல சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் ஒட்டுமொத்தமாக 65 பிரமுகர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

விபரங்களுக்கு
செக் குடியரசை 3-0 என வீழ்த்தி மெக்சிக்கோ அபார வெற்றி

செக் குடியரசை 3-0 என வீழ்த்தி மெக்சிக்கோ அபார வெற்றி

கால்பந்து கிண்ணத் தொடரின் 'A' குழுவுக்கான லீக் போட்டியில் செக் குடியரசு அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிக்கோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.ஆட்டத்தின் ஆரம்பம் முதலே மெக்சிக்கோ அணியினர் மைதானத்தில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தினர். தங்களின் சிறப்பான கூட்டு முயற்சி மற்றும் வியூகங்கள் மூலம் அடுத்தடுத்து மூன்று கோல்களைப் பெற்று அவர்கள் ஆட்டத்தில் வலுவான முன்னிலையைப் பெற்றனர்.மறுபுறம், ஆட்டத்திற்குள் மீண்டு வர செக் குடியரசு அணியினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், மெக்சிக்கோ அணியின் பலமான தற்காப்பு அரணை அவர்களால் முறியடிக்க முடியவில்லை.இறுதிவரை செக் குடியரசு அணிக்கு எந்தவொரு புள்ளியையும் விட்டுக்கொடுக்காமல், மெக்சிக்கோ அணி 3-0 என ஆட்டத்தை முழுமையாகத் தன்வசப்படுத்தி வெற்றியை உறுதி செய்தது.

விபரங்களுக்கு
தென்கொரியாவை 1-0 என வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றி!

தென்கொரியாவை 1-0 என வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றி!

கால்பந்து கிண்ணத் தொடரின் 'A' குழுவுக்கான லீக் போட்டியில் தென்கொரிய அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் தென்னாபிரிக்கா அணி தோற்கடித்துள்ளது.ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் போராடின. எனினும், தென்னாபிரிக்க அணியினர் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் முக்கிய தருணத்தில் ஒரு கோலை அடித்து முன்னிலை பெற்றனர்.பதிலடி கொடுக்க தென்கொரிய அணி இறுதிவரை தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், தென்னாபிரிக்க அணியின் பலமான தற்காப்பு அரணை அவர்களால் தகர்க்க முடியவில்லை.இறுதிவரை இந்த முன்னிலையைத் தக்கவைத்த தென்னாபிரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை தன்வசப்படுத்தியது.

விபரங்களுக்கு
ஹெய்ட்டியை வீழ்த்தி மொரோக்கோ வெற்றி

ஹெய்ட்டியை வீழ்த்தி மொரோக்கோ வெற்றி

கால்பந்து கிண்ணத் தொடரின் 'C' குழுவுக்கான லீக் போட்டியில் ஹெய்ட்டி அணியை 4 - 2 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி தோற்கடித்துள்ளது.அட்லாண்டா மைதானத்தில் 68,239 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்து 2 - 2 என சமநிலையில் முடிவடைந்தது.ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் யாசின் பூனு (Y. Bounou) சொந்த கோல் (Own Goal) அடித்ததால் ஹெய்ட்டி அணிக்கு முதல் கோல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 39ஆவது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் ஏ. ஹக்கிமி (A. Hakimi) ஒரு கோல் அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தினார். பின்னர் 43ஆவது நிமிடத்தில் ஜே. டுவெர்னின் (J. Duverne) உதவியுடன் ஹெய்ட்டி அணியின் டபிள்யூ. இசிடோர் (W. Isidor) ஒரு கோல் அடிக்க, அடுத்த இரு நிமிடங்களில் (45'+1 வது நிமிடத்தில்) ஏ. ஹக்கிமியின் உதவியுடன் மொரோக்கோவின் ஐ. சைபாரி (I. Saibari) பதில் கோல் அடித்தார்.தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மொரோக்கோ அணி முழு ஆதிக்கத்தைச் செலுத்தியது.ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் சி. ரியாத்தின் (C. Riad) உதவியுடன் எஸ். ரஹிமியும் (S. Rahimi), 89ஆவது நிமிடத்தில் எஸ். ரஹிமியின் உதவியுடன் ஜி. யாசினும் (G. Yassine) மொரோக்கோ அணி சார்பாக அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.ஆட்டநேர முடிவில் மொரோக்கோ அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் ஹெய்ட்டியை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

விபரங்களுக்கு
ஸ்கொட்லாந்தை 3 - 0 என வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி

ஸ்கொட்லாந்தை 3 - 0 என வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி

கால்பந்து கிண்ணத் தொடரின் 'C' குழுவுக்கான லீக் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோற்கடித்துள்ளது.மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியிலேயே பிரேசில் அணி 2 - 0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் ராயனின் (Rayan) உதவியுடன் பிரேசில் அணியின் வினிசியஸ் ஜூனியர் (Vinícius Júnior) முதல் கோலை அடித்தார். தொடர்ந்து, முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45'+3 நிமிடத்தில்) புரூனோ குய்மரேஸின் (Bruno Guimarães) உதவியுடன் வினிசியஸ் ஜூனியர் தனது இரண்டாவது கோலையும் அடித்தார்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், 60ஆவது நிமிடத்தில் புரூனோ குய்மரேஸின் (Bruno Guimarães) மற்றுமொரு உதவியுடன் பிரேசில் அணியின் மத்தேயுஸ் குன்ஹா (Matheus Cunha) மூன்றாவது கோலை அடித்து அணியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தினார்.ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

விபரங்களுக்கு
போஸ்னியா-ஹெர்சகோவினா வெற்றி - தொடரிலிருந்து கட்டார் வெளியேற்றம்

போஸ்னியா-ஹெர்சகோவினா வெற்றி - தொடரிலிருந்து கட்டார் வெளியேற்றம்

கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் 'B' குழுவுக்கான லீக் போட்டியில் கட்டார் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினா அணி தோற்கடித்துள்ளது.இந்த போட்டியின் முதல் பாதியில் போஸ்னியா-ஹெர்சகோவினா அணி 2 கோல்களையும், கட்டார் அணி ஒரு கோலையும் பெற்றிருந்தன. ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் ஐ. பாசிக்கின் (I. Bašić) உதவியுடன் போஸ்னியா அணியின் கே. அலஜ்பெகோவிக் (K. Alajbegović) முதல் கோலை அடித்தார்.தொடர்ந்து 34ஆவது நிமிடத்தில் கட்டார் அணியின் மஹ்மூத் அபுநாடா (Mahmud Abunada) சொந்த கோல் (Own Goal) அடித்ததன் மூலம் போஸ்னியா அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது.அதன்பின்னர் ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் எட்மில்சன் ஜூனியரின் (Edmílson Junior) உதவியுடன் கட்டார் அணியின் ஹசன் அல் ஹைதோஸ் (Hassan Al Haydos) ஒரு கோலை அடித்தார். இதன்படி முதற்பாதி ஆட்டம் 2 - 1 என முடிவடைந்தது.தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில், டி. ஹாட்ஸிகாடுனிக்கின் (D. Hadžikadunić) உதவியுடன் போஸ்னியா அணியின் ஈ. மஹ்மிக் (E. Mahmić) மூன்றாவது கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதன்படி, ஆட்டநேர முடிவில் போஸ்னியா-ஹெர்சகோவினா அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, நடப்பு உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் ஆறாவது அணியாக கட்டார் மாறியுள்ளது. இதேவேளை, இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள போஸ்னியா-ஹெர்சகோவினா அணி அடுத்த சுற்றுக்கு (இரண்டாம் சுற்று) முன்னேறுவதற்கான அதிக வாய்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!

நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!

பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டில் பணம் மற்றும் வைரம் திருடப்பட்டுள்ளதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து ரூ. 3 இலட்சம் ரொக்கப் பணம் மற்றும் வைரம் (டைமண்ட்) செயின் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, நடிகரின் மேனேஜர் நீலாங்கரை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வீட்டில் பணிபுரியும் 2 சாரதிகள், ஒரு பி.ஏ (P.A), ஒரு பணிப்பெண் மற்றும் அவரது மகன் மீது சந்தேகம் இருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை நீலாங்கரை காவல்துறை முன்னெடுத்து வருகிறது.

விபரங்களுக்கு
சுப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி: ரஜினியின் அடுத்த அதிரடி 'தர்மன்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி: ரஜினியின் அடுத்த அதிரடி 'தர்மன்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு ‘தர்மன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ‘தர்மன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதுடன் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் படையப்பா, வேட்டையாடு விளையாடு திரைப்படங்களின் கலவையாக பொழுதுபோக்கு நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகும் என தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!

வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!

பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது புகைப்படங்கள் (Photos) மற்றும் காணொளிகளை ஒருமுறை மட்டுமே பார்க்கும் வகையில் அனுப்பப்படும் 'View-once' வசதியைப் போலவே, இனி சாதாரண குறுந்தகவல்களையும் (Text Messages) ஒருமுறை மட்டுமே படிக்கும் வகையில் அனுப்பும் புதிய முறையை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது. பயனர்களின் தனியுரிமையைப் பேணவும், முக்கியமான தகவல்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காகவுமே இந்த 'View-once text' முறை கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாதுகாப்பு வசதியானது, தற்போது முதற்கட்டமாக ஒரு சில ஐபோன் (iPhone) பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் (Beta Version) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததும், அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் இந்த புதிய அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட மரணம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட மரணம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

இந்தியாவின் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் 'புஷ்பா 2' திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்குத் தொடர்பாக, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேரையும் எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 2024 டிசம்பர் 4 அன்று ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனைப் பார்ப்பதற்காகக் கூடிய ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்ததுடன், அவரது 8 வயது மகனும் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் காவல்துறை கடந்த டிசம்பர் 24 அன்று 23 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குறித்த சம்பவம் தொடர்பாக 2024 டிசம்பர் 13 அன்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன், படக்குழுவினர் மற்றும் தெலங்கானா அரசாங்கம் நிதியுதவி வழங்கியிருந்தது. இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் அல்லு அர்ஜுனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!

இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!

புகழ்பெற்ற ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'The Odyssey' திரைப்படம், இந்தியாவில் சிறப்பு காட்சி (Premiere) காணும் முதல் நோலன் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளது. உலகளாவிய விளம்பரப் பயணத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஜூலை மாதம் இயக்குனர் நோலன், அவரது தயாரிப்பாளரான மனைவி எம்மா தோமஸ் மற்றும் ஹொலிவுட் நட்சத்திரங்களான மேட் டாமன், டாம் ஹாலாண்ட் ஆகியோர் மும்பை நகருக்கு வருகை தரவுள்ளனர். யுனிவர்சல் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லண்டன், பாரிஸ் மற்றும் நியூயோர்க் ஆகிய சர்வதேச நகரங்களுடன் இணைந்து மும்பையையும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ உலகளாவிய சிறப்பு நகரமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஹோமரின் உன்னத காவியமான, டிராய் நகரின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒடிஸியஸ் தனது வீட்டிற்குத் திரும்ப மேற்கொள்ளும் பத்து ஆண்டுகாலப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒடிஸியஸாக மேட் டாமனும், அவரது மகன் டெலிமகாஸாக டாம் ஹோலாண்டும் நடித்துள்ளனர். முற்றிலும் புதிய ஐமாக்ஸ் (IMAX) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகளவில் முழுமையாக ஐமாக்ஸ் கேமராக்களால் படமாக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையை 'The Odyssey' பெற்றுள்ளது. இந்தியாவில் இதன் சிறப்பு காட்சி மும்பையிலுள்ள 'PVR Icon IMAX: Phoenix Palladium' திரையரங்கில் நடைபெறவுள்ளது. சின்கோபி (Syncopy) நிறுவனத்திற்காக நோலன் மற்றும் எம்மா தயாரித்துள்ள இந்த படத்தில், மேட் டாமன் மற்றும் டாம் ஹாலாண்டுடன் இணைந்து ஆன் ஹாத்வே, ரொபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மோர்டன், ஜெண்டாயா மற்றும் சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட பல முன்னணி ஹொலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விபரங்களுக்கு
தமிழக முதலமைச்சர் விஜய்யை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை சிம்ரன்!

தமிழக முதலமைச்சர் விஜய்யை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை சிம்ரன்!

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை, பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் இணைந்து நடித்து, ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற சூப்பர் ஹிட் ஜோடிகளுள் ஒருவரான விஜய் மற்றும் சிம்ரன் ஆகியோரின் இந்த திடீர் சந்திப்பு தற்பொழுது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சிம்ரன், தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இச்சந்திப்பின் போது நடிகை சிம்ரனின் கணவர் தீபக் பாகா மற்றும் அவர்களது மகன்கள் உடனிருந்தனர். முன்னாள் சக நடிகை என்ற ரீதியிலும், நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையிலும் இந்த சந்திப்பு மிகவும் சுமுகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்யுடன், நடிகை சிம்ரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த பிரத்தியேகப் புகைப்படம் தற்பொழுது இணையத்திலும், சினிமா ரசிகர்களிடையேயும் வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!

அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!

பிரான்சில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 24 மணி நேர லெ மான்ஸ் (24 Hours of Le Mans) சிற்றூந்து பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் 'அஜித் குமார் ரேசிங்' அணி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. பிரான்சில் உள்ள புகழ்பெற்ற 'சர்க்யூட் டெஸ் 24 ஹவர்ஸ் டு மான்ஸ்' (Circuit des 24 Heures du Mans) ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச அளவிலான கடுமையான சிற்றூந்து பந்தயத்தில், அஜித் குமாரின் அணி பங்கேற்று கவனம் ஈர்த்தது. குறிப்பாக, லெ மான்ஸ் பந்தய வரலாற்றில் முதன்முறையாக பங்கேற்ற இந்திய அணியாக 'அஜித் குமார் ரேசிங்' அணி இடம்பிடித்துள்ளது. மொத்தம் 62 சிற்றூந்துகள் பங்கேற்ற இந்த சவாலான போட்டியில், அஜித் அணியின் இரண்டு வாகனங்களும் சிறப்பான நிலைகளைப் பெற்றுள்ளன. அதன்படி, சிற்றூந்து எண் 16 தனது பிரிவில் 9-வது இடத்தை பெற்றது. சிற்றூந்து எண் 36 ஒட்டுமொத்த தரவரிசையில் 13-வது இடத்தை பிடித்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து, அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித், குடும்பத்தினருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் விஜய் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் போட்டியை நேரில் கண்டு, அதைப் பதிவு செய்ய அழைத்ததற்காக அஜித் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித் குமாரின் இந்த சாதனை இந்திய மோட்டார் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

விபரங்களுக்கு
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!

'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!

தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரமான அஜித் குமாரின் 64-ஆவது திரைப்படமான 'AK 64' குறித்த புதிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு பிரம்மாண்ட தொகை வேதனமாக பேசப்பட்டு வருவதாக கொலிவூட் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக சில முன்னணி கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களும், புதிய தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்குமாருக்கு 187 கோடி ரூபாய் வேதனமாக வழங்குவதற்கு தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த வேதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தொகை குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது, நடிகர் அஜித் தரப்பிலிருந்து மிகவும் கடுமையான நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தனக்கு வழங்கப்படும் முழு வேதனத்தையும் தனது அதிகாரபூர்வ வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும் என அஜித் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான கண்டிஷன் தற்போது சினிமா தரப்புக்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. "விடாமுயற்சி" மற்றும் "குட் பேட் அக்லி" ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, அஜித்தின் 64-ஆவது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////