General26 June 2026

ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இல்லை: அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி உறுதி

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள்குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி முற்றாக நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்தார்.

ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தமுறை யாத்திரிகர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

உலகம் முழுவதிலும் இருந்து 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றதன் காரணமாக சில சவால்கள் உருவானது உண்மைதான்.

இருப்பினும், அவற்றை இயன்றவரை கட்டுப்படுத்தவும் குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.தற்போது ஹஜ் யாத்திரை தொடர்பான முழுமையான அறிக்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
 
அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை முறையாக ஆராய்ந்து, எதிர்கால யாத்திரைகளின் போது இன்னும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes