அம்பாறை, கல்முனை தலைமையக காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில், கடமையிலிருந்த காவல்துறையினரை அச்சுறுத்தி அவர்களது துப்பாக்கியைப் பறிக்க முயன்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மதுபோதையில் மனைவியை தாக்கியுள்ளார். இந்த நிலையில் மனைவி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதன் போது சந்தேக நபர் காவல்துறையினரின் துப்பாக்கியை அவர்களிடமிருந்து பறித்து குழப்பம் விளைவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேலதிக காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன்,
துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது காயமடைந்த காவல்துறையினர் சிகிச்சைக்காக கல்முனை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக கல்முனை காவல்துறை பொறுப்பதிகாரி சூரியன் செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மீது, காவல்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பிலான குற்றஞ்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேக நபருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்முனை காவல்துறை பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
Latest News
பிரான்சில் தகிக்கும் வெப்ப அலை: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Local
27 June 2026
ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவுக் கோளில் நிலநடுக்கம்: வட இந்தியாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
Local
27 June 2026
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் ஒப்பந்த மீறலுக்கு ஈரானின் கடும் எச்சரிக்கை
Local
27 June 2026
12 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்
Local
27 June 2026
மட்டக்குளியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது!
Local
27 June 2026
பொசன் பண்டிகை: தாராளமாகப் பதிவு செய்யப்பட்ட தானசாலைகள்; பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைக்குக் கடும் எச்சரிக்கை!
Local
27 June 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை எச்சரிக்கை: பல மாவட்டங்களில் 50 மி.மீ க்கும் அதிக பலத்த மழை!
Local
27 June 2026
கல்முனையில் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சி: சந்தேக நபருக்கு விளக்கமறியல் !
Local
27 June 2026
அரசாங்கம் நிர்ணயித்த விலையை மீறிய வர்த்தகர்கள்: தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 200,000 அபராதம்!
Local
27 June 2026
பிலியந்தலையில் சோகம்: 16 வயது பாடசாலை மாணவர்கள் பயணித்த உந்துருளி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்!
Local
27 June 2026