General27 June 2026

பொசன் பண்டிகை: தாராளமாகப் பதிவு செய்யப்பட்ட தானசாலைகள்; பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைக்குக் கடும் எச்சரிக்கை!

இந்தமுறை பொசன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பெருமளவிலான தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெசாக் பண்டிகையுடன் ஒப்பிடுகையில், இந்தமுறை அதிகளவிலான தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இதில் வடமத்திய மாகாணத்திலிருந்தே அதிக எண்ணிக்கையிலான தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தானசாலைகளை நடத்தும் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளைப் பொலித்தீன் பைகளில் சேமித்து வழங்குவது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தான விடயமாகும் ஆகவே, பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான பானங்கள் மற்றும் உணவுகளை வழங்குவது தொடர்பாக விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கோபி மற்றும் பானங்கள் வழங்கும் தானசாலைகனில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் கண்டபடி வீசப்படுவதால், அவற்றில் நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

தற்போது நிலவும் டெங்கு அபாய நிலைமையைக் கருத்தில் கொண்டு, தானசாலைகளை நடத்துவோர் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைத் தவிர்த்து, சூழலைப் பாதுகாப்பதில் பொறுப்புடன் செயற்படுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes