General28 June 2026

சவூதி அரேபியாவில் வானூர்தி விபத்து: 14 பேர் பலி!

சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான 'அரம்கோ' (Aramco) நிறுவனத்துக்குச் சொந்தமான உலங்கு வானூர்தியொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியாவின் வளைகுடா கரையோரத்தில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் மற்றும் தொழில் மையமான 'ராஸ் தனூரா' (Ras Tanura) பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்த அனைவரும் சவுதி பிரஜைகள் என சவுதி செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இது குறித்த மேலதிக விசாரணைகளை சவூதி எரிசக்தி அமைச்சு மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes