வெனிசுவேலாவின் லாகாயிரா (La Guaira) மாநிலத்தில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் 106 மணிநேரம் சிக்கியிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
ஆரோன் லெவி கேன்டிலோ வர்காஸ் (Aaron Levi Cantillo Vargas) என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இளைஞர், காரபல்லேடா (Caraballeda) நகரில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக எல் சால்வடோர் ஜனாதிபதி நயீப் புக்கலே தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா, மெக்சிகோ மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் இணைந்து இந்தச் சவாலான மீட்புப் பணியை முன்னெடுத்தனர். இந்த இளைஞரை மீட்பதற்கான முயற்சியில் மிகப்பெரிய சிக்கல் இருந்ததாக ஜனாதிபதி நயீப் புக்கலே குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளைஞருக்கும், அவரை மீட்கச் சென்ற குழுவினருக்கும் இடையில் உயிரிழந்த ஒருவரது உடல் இருந்ததால், மீட்புப் பணிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டன.
இளைஞரை மீற்பதற்காக மீட்புக் குழுவினர் தொடர்ச்சியாக 43 மணிநேரம் கடுமையாகப் போராடியதாக வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட ஆரோன் லெவிக்கு தற்போது விசேட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி நயீப் புக்கலே, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் பலரை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கையுடன் மீட்புக் குழுவினர் தமது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்
Local
29 June 2026
லங்கா ஐஓசி எரிபொருள் விலையும் குறைகிறது!
Local
29 June 2026
வெனிசுவேலாவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்: தலைநகருக்கு அருகே 4.6 மெக்னிடியூட் அளவில் அதிர்வு
Local
29 June 2026
எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!
Local
29 June 2026
வெனிசுவேலாவில் 106 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு!
Local
29 June 2026
2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: கிரிக்கெட் தகுதிச் சுற்று அளவுகோல்களை வெளியிட்டது ஐசிசி!
Local
29 June 2026
துப்பாக்கியை தவறவிட்ட காவல்துறை அதிகாரிக்கு விளக்கமறியல்!
Local
29 June 2026
ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் துப்பாக்கிச் சூடு: ஐவர் உயிரிழப்பு
Local
29 June 2026
கட்டாரில் பேச்சுவார்த்தையென ட்ரம்ப் அறிவிப்பு : மறுக்கும் ஈரான்!
Local
29 June 2026
லொக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு
Local
29 June 2026