General03 July 2026

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வென்னப்புவ ஜோசப் வாஸ் வித்தியாலயம் முதலிடம்

தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்று வரும் Hiru Relay Championship 2026 ,18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வென்னப்புவ ஜோசப் வாஸ் வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ் ஹிரு ஊடகக் குழுமத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த அஞ்சலோட்டப் போட்டி, கல்வி அமைச்சின் அனுமதியுடன் அனைத்து வயதுப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்படுகின்றது.

இதில் நாடளாவிய ரீதியில் இருந்து 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes