General04 July 2026

பதக்க மேடை ஏறிய முதலாவது இலங்கை வீரர் யெவன் டேவிட்: ஃபோர்முலா 3 பந்தயத்தில் சாதனை!

FIA ஃபோர்முலா 3 செம்பியன்ஷிப் தொடரின் ஸ்பிரிண்ட் பந்தயத்தில் (Sprint Race) இலங்கையின் இளம் காரோட்ட பந்தய வீரர் யெவன் டேவிட் (Yevan David) இரண்டாம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பிரித்தானியாவின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) ஓட்டப்பாதையில் இந்த போட்டி நடைபெற்றது.

இதன் மூலம், உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட FIA ஃபோர்முலா 3 பந்தயம் ஒன்றில், முதல் மூன்று இடங்களுக்குள் வந்து பதக்க மேடையை அலங்கரித்த முதலாவது இலங்கை பந்தய ஓட்டுநர் என்ற வரலாற்றுப் பெருமையை யெவன் டேவிட் தன்வசப்படுத்தியுள்ளார்.

Related recommendation
Hiru TV News | Programmes