கடந்த 2022ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட இயற்கை உரத் திட்டத்தை முழுமையாக அழித்தது முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்த்தன பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் மாவனெல்லை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இயற்கை உரத் திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்று நான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேரடியாகக் கேட்டபோது, அவரே இந்த உண்மைகளை ஒப்புக்கொண்டார்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கே தெரியாமல் இந்த இயற்கை உரத் திட்டத்தை முழுமையாகப் பொறுப்பேற்று, தனது நிறுவனத்தின் ஊடாக அசோக ரன்வலவே அதனை நடத்தினார்.
பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்து கொண்டு கோட்டாபயவுக்கு அவரே முழுமையான நம்பிக்கையளித்தார்.
ஆனால், அவர் ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர் என்பது கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தெரிந்திருக்கவில்லை.
தேர்தலில் தோல்வியடைந்த பின்னரே அசோக ரன்வல ஜே.வி.பி காரர் என்ற உண்மை கோட்டாபயவுக்குத் தெரியவந்தது.
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திட்டமிட்டுச் செய்யப்பட்ட இந்தச் சதித்திட்டத்துக்குப் பிரதி உபகாரமாகவே, அசோக ரன்வலவுக்குச் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஜே.வி.பியினர் ஊழல் செய்யவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது.
அவர்கள் 2024ஆம் ஆண்டுக்கு முன்பே உண்மையான திருட்டுகளைச் செய்து, அந்தப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவ்வாறு இல்லையென்றால், குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள குமார் ஜயகொடி போன்றவர்கள் இவ்வளவு சுதந்திரமாக நடமாட முடியாது.
அதேபோல், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ஷவின் வீட்டில் பெயர் குறிப்பிடப்படாத ஒருவரிடமிருந்து 25 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
அநுர குமார லட்சக்கணக்கில் பணத்தைப் பெறும்போது அது 'பரிசு' என்றும், நாட்டின் ஏனைய பொது மக்கள் யாராவது அதைப் பெற்றால் அது 'திருட்டு' என்றும் முத்திரை குத்தப்படுவது எந்த வகையான கோட்பாடு என்பதை ஜே.வி.பியினர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன மேலும் தெரிவித்தார்.

Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - விசாரணைக்கு விசேட குழு நியமனம்
Local
06 July 2026
கோட்டாபயவின் இயற்கை உரத் திட்டத்தை அழித்தது அசோக ரன்வலவே: சஜித் தரப்பு குற்றச்சாட்டு!
Local
06 July 2026
சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு!
Local
06 July 2026
நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி விபத்து: 10 பேர் மீட்பு
Local
06 July 2026
சிகாகோவில் தரையிறங்கிய போது டெல்டா வானூர்தி மீது வான வேடிக்கை வெடிப்பொருள் தாக்கம்- மக்கள் அதிர்ச்சி
Local
06 July 2026
இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரின் உயிருக்கு ஆபத்து: மகன் அவசர கோரிக்கை
Local
06 July 2026
3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் மே.இ.தீவுகள் 318 ஓட்டங்களை பெற்றது!
Local
06 July 2026
ஈரானின் மறைந்த உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கில் எதற்காக சிவப்பு கொடிகள்?
Local
06 July 2026
பிரேசில் வெளியேற்றம் - நோர்வே காலிறுதிக்கு முன்னேற்றம்!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு போதைப்பொருள் கடத்தல் காட்டிக்கொடுப்பே காரணமாம்!
Local
06 July 2026