International06 July 2026

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் சரிவு!

சர்வதேச சந்தையில் இன்று (6) மசகு எண்ணெய் விலை சரிவை பதிவு செய்துள்ளது.

இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.33 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 71.88 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.16 சதவீதத்தால் சரிவடைந்து 68.58 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் எண்ணெய் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு 'ஒபெக் பிளஸ்' (OPEC+) நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளமையும், ஹோர்முஸ் நீரிணை வழியிலான ஏற்றுமதி வழமைக்குத் திரும்பி வருகின்றமையுமே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என சந்தை விபரங்கள் தெரிவிக்கின்றன.

Related recommendation
Hiru TV News | Programmes