General07 July 2026

ஊவா பல்கலைக்கழக நியமன மோசடி: கையூட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

ஊவா பல்கலைக்கழகத்தின் நூலக அலுவலக உதவியாளர் பதவியைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 3 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவரை 20 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அத்துடன் சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes