கண் சத்திரசிகிச்சையின் பின்னர் 'பெட்ரிசிலோன் அசிடேட்' (Prednisolone Acetate) கண்ணுக்கான திரவ மருந்தைப் பயன்படுத்தியதால் கண் பார்வையை இழந்த மேலும் நான்கு நோயாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 2023 மார்ச் 03 ஆம் திகதி முதல் 2023 மே 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில், இந்தத் திரவ மருந்துப் பாவனையால் நுவரெலியா பொது மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட சிலருக்கு கண் பார்வை இழப்பு அல்லது தொடர்ச்சியான பார்வைக் குறைபாடு ஏற்பட்ட சம்பவங்கள் பதிவாகின.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு பார்வையை இழந்த 17 நோயாளர்களுக்கு ஏற்கனவே நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த காலப்பகுதியில் நுவரெலியா மருத்துவமனை தவிர்ந்த ஏனைய மருத்துவமனைகளில் கண் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட போது, இந்த மருந்தைப் பயன்படுத்தியதால் கண் குறைபாடுகளுக்கு ஆளாகியுள்ள ஏனைய நோயாளர்களைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவினர் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், விழிப்புலனை இழந்துள்ள மேலும் நான்கு நோயாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு விதந்துரைத்துள்ளனர்.
அதற்கமைய, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அந்த நான்கு நோயாளர்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நட்டஈடு செலுத்துவதற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

Latest News
எம்.பிக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்
Local
07 July 2026
உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம் : கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றது திமுக!
Local
07 July 2026
"அரசின் பொறுப்பில் உள்ள கைதிகளின் உயிருக்கு பாதுகாப்பு எங்கே?" – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது சாடல்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை குறித்து முன்கூட்டிய உளவுத் தகவல் கிடைத்ததா?
Local
07 July 2026
யானைத்தந்த வழக்கில் சிக்கிய மோகன்லால் - விசாரணையில் வெளியவந்த பொருட்கள்
Local
07 July 2026
புதையல் திருட்டுக்கு பின்னால் அரசியல் பின்னணி": பிரேமதாச, ராஜபக்ச குடும்பங்கள் குறித்து சபையில் குற்றச்சாட்டு!
Local
07 July 2026
நாடாளுமன்றில் அநாகரிக வார்த்தைப் பிரயோகம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை குழுவிலிருந்து நீக்கக் கோரி சபாநாயகருக்கு அர்ச்சுனா கோரிக்கை!
Local
07 July 2026
ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் மரணம்!
Local
07 July 2026
விண்வெளிக்குச் செல்லும் தங்கம், வைரம் : வரலாற்றுச் சாதனைக்குத் தயாராகும் "ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்" நிறுவனம்!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
Local
07 July 2026