கால்பந்து தொடரின் 16 அணிகளுக்கான சுற்றில், அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தத் தோல்விக்குப் பின்னர் எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹொசம் ஹசன், போட்டியின் நடுவர்கள் தனது அணியை ஏமாற்றிவிட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்டத்தில் எகிப்து அணி ஆரம்பத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இருப்பினும், போட்டியின் இறுதிக்கட்டத்தில் அர்ஜென்டினா அணி மூன்று கோல்களை அடித்து அபார வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.
போட்டியின் முடிவில் ஊடகங்களிடம் பேசிய பயிற்சியாளர் ஹொசம் ஹசன், நடுவர்களின் பாரபட்சமான முடிவுகளே தோல்விக்குக் காரணம் என்று தெரிவித்தார்.
எகிப்து அணி அடித்த கோல் ஒன்று VAR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கப்பட்டதை அவர் கடுமையாக விமர்சித்தார்.
அர்ஜென்டினாவின் வெற்றி கோலுக்கு முன்னதாக, எகிப்து வீரர் ஒருவரின் சட்டையைப் பிடித்து இழுத்தமைக்குத் தங்களுக்குப் பெனால்டி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதை நடுவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.
"நடப்பு கால்பந்து செம்பியனான அர்ஜென்டினா அணியும், மெஸ்ஸியும் தொடர்ந்து தொடரில் நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடுவர்கள் செயல்பட்டிருக்கலாம்" என அவர் சந்தேகம் எழுப்பினார்.
மேலும், எகிப்து அணி தனது முந்தைய போட்டி முடிந்து வெறும் நான்கு நாட்களிலேயே நண்பகல் வேளையில் இந்தப் போட்டியில் விளையாட வேண்டியிருந்தது என்றும், இந்த அட்டவணை வீரர்களுக்கு அநீதி இழைப்பதாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Latest News
சுகாதார சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே அரசின் இலக்கு: ஜனாதிபதி
Local
09 July 2026
இலங்கையில் இன்று மேலும் வீழ்ச்சியடைந்த தங்க விலை!
Local
09 July 2026
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது வழக்குத் தாக்கல்
Local
09 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
09 July 2026
எல் நினோ காலநிலை தாக்கம் - நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
Local
09 July 2026
டெங்கு பரவல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு
Local
09 July 2026
அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகருக்கு கஜேந்திரகுமார் கடிதம்
Local
09 July 2026
ஓய்வூதியதாரர்களுக்கான விசேட இணையவழி விழிப்புணர்வு தொடர் இன்று ஆரம்பம்
Local
09 July 2026
15 நோயாளிகளின் மரணங்களுக்கு காரணமான மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
Local
09 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: பெண் கைதிகள் இடமாற்றம்
Local
09 July 2026