இந்தியத் திருமணச் சந்தை குறித்த புதிய ஆய்வறிக்கை ஒன்றில், 2025ஆம் ஆண்டில் இந்தியர்களின் வெளிநாட்டுத் திருமணத் தங்குமிடங்களுக்கான விருப்பத் தேர்வுகளில் இலங்கை அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வெட்மீ குட்’ (WedMeGood) தளத்தின் ‘2026 இலக்குத் திருமண அறிக்கை’ (Destination Wedding Report 2026) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் இந்தியத் திருமணங்களுக்கான வெளிநாட்டுத் தேர்வுகளில் இலங்கை 25% அதிகரிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவிற்கு அருகாமையில் அமைந்திருப்பது, எளிதான போக்குவரத்து வசதிகள் மற்றும் உயர்தர சொகுசு விருந்தகங்கள் கட்டமைப்புகள் இதற்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி சூழல்களுக்கு மத்தியிலும், இந்தியத் தம்பதிகள் தங்கள் திட்டங்களைக் கைவிடத் தயாராக இல்லை. இருப்பினும், பாதுகாப்பான மற்றும் போக்குவரத்து வசதிகள் கொண்ட இடங்களையே அவர்கள் தற்போது முன்னுரிமைப்படுத்தி வருவதால், இலங்கையின் தேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 25 லட்சம் இந்தியர்களின் வருகையுடன், இப்போதும் சர்வதேச அளவில் இந்தியத் திருமணங்களுக்கு விருப்பமான முதல் நாடாக தாய்லாந்து தொடர்கிறது.
சர்வதேச இலக்குத் திருமணங்களுக்கான சராசரி பட்ஜெட் சுமார் ரூ. 1.5 கோடியாகவும், உள்நாட்டுத் திருமணங்களுக்கு ரூ. 58 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
2028ஆம் ஆண்டிற்குள் மொத்தத் திருமணங்களில் 30-32% பங்கினை இலக்குத் திருமணங்கள் (Destination Weddings) பிடிக்கும் என இந்த அறிக்கை கணிக்கிறது.
இந்த ஆய்வு, சுமார் 2.5 லட்சம் நுகர்வோர் மற்றும் 24,000 தொழில்துறை நிபுணர்களை உள்ளடக்கிய தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியர்கள் தங்கள் திருமணங்களில் கலாசாரம் மற்றும் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்கு அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி – ரூ.943 கோடி லொத்தர் பரிசு!
Local
14 July 2026
இந்தியர்களின் கனவுத் திருமணத் தளமாக மாறிய இலங்கை: 25% வளர்ச்சியுடன் முதலிடம்
Local
14 July 2026
தவறுகளை மறைக்க 'சதித்திட்ட' முத்திரை!
Local
14 July 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
Local
14 July 2026
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் : 4.41 இலட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
Local
14 July 2026
தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஜேடன் ஆடம்ஸின் மரணம்: காவல்துறை விசாரணை தீவிரம்
Local
14 July 2026
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
Local
14 July 2026
ரூ. 6 கோடிக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது
Local
14 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
14 July 2026
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கக்கூடும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
14 July 2026