ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில் ChatGPT மீண்டும் WhatsApp-இல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தத் தகவல்களின்படி, கடந்த ஆறு மாதங்களாக WhatsApp-இல் ChatGPT-ஐ பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்ட நிலையில், 2026 ஜூலை 13 முதல் சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், 2025 ஒக்டோபரில் Meta நிறுவனம் WhatsApp Business API விதிகளை மாற்றி, ChatGPT மற்றும் Microsoft Copilot போன்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளர்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியதாகவும், அதற்கு "சர்வர் சுமை அதிகரிப்பு" காரணம் என விளக்கமளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், 2026 ஜூன் 9 அன்று ஐரோப்பிய ஒன்றியம் Meta நிறுவனத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து, WhatsApp API-க்கான அணுகலை மீண்டும் திறக்க உத்தரவிட்டதாகவும், விதிகளை மீறினால் ஆண்டு வருமானத்தின் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரித்ததாகவும் வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
இதன்படி, ஐரோப்பிய ஒன்றியப் பயனர்கள் சரிபார்க்கப்பட்ட எண்ணின் ஊடாக WhatsApp-இல் ChatGPT-ஐ பயன்படுத்தி உரையாடல், குரல் உள்ளீடு, படங்களைப் பதிவேற்றம் மற்றும் AI பட உருவாக்கம் உள்ளிட்ட வசதிகளைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, ChatGPT-ஐ பயன்படுத்திய பின்னர் சில WhatsApp கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக சில பயனர்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும், சரிபார்க்கப்பட்ட அதிகாரபூர்வ எண்ணை மட்டுமே பயன்படுத்துமாறு OpenAI அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Latest News
'நாங்கள் செய்த பிழைகளே தோல்விக்கு காரணம்' - மனம் திறந்த எம்பாப்பே!
Local
15 July 2026
2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்
Local
15 July 2026
நீர்கொழும்பு மாநகர முதல்வர் ரொபர்ட் ஹீன்கெந்த பதவி விலகல்
Local
15 July 2026
ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு சலுகை மறுப்பு - இந்திய அரசிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்
Local
15 July 2026
உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் விடுமுறை தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு
Local
15 July 2026
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட போது சம்பவம்
Local
15 July 2026
அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ: எச்சரிக்கை
Local
15 July 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்
Local
15 July 2026
'AK64' படத்தை அஜித் தானே தயாரிக்கின்றாரா? – ஷாலினி அஜித் குறித்த புதிய தகவல்!
Local
15 July 2026
வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்
Local
15 July 2026