இங்கிலாந்தின் ட்ரூரோவில் உள்ள பெனாயர் பாடசாலையைச் சேர்ந்த வரலாற்று மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலாம் உலகப் போர் வீரர்களின் நாட்குறிப்புகளைத் குறும்படங்களாக உருவாக்கியுள்ளனர்.
கோர்ன்வால் பகுதியைச் சேர்ந்த ஜோன் ஃபிரெஞ்ச் என்ற சுரங்கத் தொழிலாளி, முதலாம் உலகப் போரின் போது '251-வது சுரங்கப் படைப்பிரிவில்' (Tunnelling Company) சேர்ந்து பணியாற்றியவர்.
அவர் தன் போர் அனுபவங்களை நாட்குறிப்புகளாக எழுதியிருந்தார்.
மாணவர்கள் அந்த நாட்குறிப்புகள் மற்றும் அகழிகளின் காட்சி விவரிப்புகளை AI மென்பொருளில் உள்ளீடு செய்து, தத்ரூபமான படமாக உருவாக்கினர்.
இந்த நாட்குறிப்புகள் அவரது குடும்பத்தினரின் பரணில் கண்டெடுக்கப்பட்டவை.
இந்தப் படத்தைப் பார்த்த அவரது மருமகள் பென்னி பிக்டன், "இது நெஞ்சை உருக்கும் படைப்பாக உள்ளது" எனக் கூறி கண்ணீர் விட்டு நெகிழ்ந்தார்.
இந்த நிலையில் குறித்த முயற்சிக்காக 'வெஸ்டர்ன் ஃபிரண்ட் எசோசியேஷன்' வழங்கிய உள்ளூர் வரலாற்று ஆராய்ச்சிக்கான மெல்கம் டூலின் பரிசை (Malcolm Doolin Prize) இங்கிலாந்தின் ட்ரூரோவில் உள்ள பெனாயர் பாடசாலை வென்றுள்ளது.
"திரைப்படம் எடுக்கத் தேவையான பெரும் பொருட்செலவு மற்றும் நடிகர்கள் இல்லாத சூழலில், புத்தகங்களில் முடங்கிக்கிடக்கும் வரலாற்றுப் பதிவுகளுக்கு உயிரூட்ட AI ஒரு சிறந்த கருவியாகப் பயன்படுகிறது" என உள்ளூர் வரலாற்று ஆசிரியர் டோனி ஸ்மித் தெரிவித்தார்.
மாணவர்கள் தங்கள் சொந்த ஊரைச் சேர்ந்த மனிதர்களின் உண்மையான கதைகளை ஆராயும்போது, அது வரலாற்றை உணர்வுபூர்வமாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது என வரலாற்று ஆசிரியை டினா டுருலோ குறிப்பிட்டுள்ளார்.
Latest News
ஈரான் மீது தொடரும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் : 11ஆவது இரவாக அதிரடி நடவடிக்கை!
Local
22 July 2026
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மீது விசாரணை ஆரம்பம்!
Local
22 July 2026
15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!
Local
22 July 2026
யுக்ரைன் நாட்டின் முப்படைத் தளபதி பணிநீக்கம்!
Local
22 July 2026
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் "வெறித்தனமாக" விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
Local
22 July 2026
கோட்ஸிலா வெர்சஸ் கோங் (Godzilla vs. Kong)' பட நடிகை கெய்லி ஹோட்டில் சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தார்!
Local
22 July 2026
AI மூலம் முதலாம் உலகப் போர்க் கதைகளுக்கு உயிரூட்டும் பாடசாலை மாணவர்கள்
Local
22 July 2026
அஞ்ச வேண்டிய நிலை": பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் இன்ஸ்டாகிராம் பதிவு!
Local
22 July 2026
சிவகாசி துர்க்கை பரமேஸ்வரி கோயிலில் பிஸ்கட் பொதிகளால் சிறப்பு அலங்காரம்
Local
22 July 2026
போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட பேச்சாளர் நீக்கம் - கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!
Local
22 July 2026