General23 July 2026

நாடாளுமன்றத்தில் 43வது கருப்பு ஜூலை நினை வேந்தல் : தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதனை!

1983 ஆண்டு வன்முறையின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

1983 ஜூலை வன்முறையின் 43ஆவது ஆண்டு நிறைவு இன்று (23) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நினைவுகூரப்பட்டது.

ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் நடந்து இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துவிட்டன.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன என தமிழ் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
Related recommendation
Hiru TV News | Programmes