பிரான்ஸின் போர்டோ நகருக்கு மேற்கே பரவி வரும் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்து வருவதாகக் கிரொண்டே பிராந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரை சுமார் 42,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதுடன், பாதுகாப்பு கருதி சுமார் 220,000 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் 240 குடியிருப்புகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 2,750 தீயணைப்பு வீரர்கள், 18 வான்படை வானூர்திகள், 1,500 இராணுவத்தினர் மற்றும் 1,440 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் பணியின் போது இதுவரை 88 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் மீண்டும் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
துறைமுக நகர் மோதலில் சீன நாட்டவர் உயிரிழந்த விவகாரம்: 8 சந்தேக நபர்கள் அடையாளம்!
Local
28 July 2026
பெருந்தோட்ட மக்களின் காணி உரிமைக்காகச் செயற்படுவோம்: சஜித் பிரேமதாச உறுதி!
Local
28 July 2026
படப்பிடிப்பு தளத்தில் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
Local
28 July 2026
எல் நினோ தாக்கம்: நீர் மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தல்!
Local
28 July 2026
கிரிக்கெட்டை மீட்க களம் இறங்கிய ஜனாதிபதி!
Local
28 July 2026
ஹொரணை மருத்துவமனையில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்
Local
28 July 2026
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது!
Local
28 July 2026
5 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
28 July 2026
ஊழியர்களின் மருத்துவ விடுமுறைக்குக் கட்டுப்பாடு
Local
28 July 2026
கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' திரைப்படம் எக்ஸ் தளத்தில் கசிவு: கோபத்தில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ்!
Local
28 July 2026