அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இரு தரப்பும் அறிவித்த நிலையில், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 87.59 டொலர்கள் வரை சரிவடைந்தது.
கடந்த வாரம் 100 டொலர்களை கடந்திருந்த நிலையில், தற்போது 6 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் செங்கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவியது.
இதனால் பணவீக்கம் அதிகரித்து, வட்டி வீதங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டதுடன், ஐரோப்பாவில் எரிவாயு இருப்பும் வரலாற்று அளவில் சரிவைக் கண்டிருந்தது.
தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ள போதிலும், இந்த அமைதி நீடிக்குமா என்ற சந்தேகம் நிலவுவதால், முதலீட்டாளர்கள் மற்றும் உலகச் சந்தை நிலவரங்கள் தொடர்ந்து அவதானத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Latest News
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Local
28 July 2026
மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்!
Local
28 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!
Local
28 July 2026
விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்சவுக்கு பிணை
Local
28 July 2026
திடீரென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன?
Local
28 July 2026
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு பிணை!
Local
28 July 2026
'ஜனநாயகன்' படத்தில் விடுபட்ட அந்த 6 காட்சிகள் என்னென்ன? எச்.வினோத் வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
28 July 2026
ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை: சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
28 July 2026
உலகளவில் வேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கைக்கு 4ஆம் இடம்!
Local
28 July 2026
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு: இன்று மீண்டும் விசாரணை!
Local
28 July 2026