எத்தனோல் கலக்கப்பட்ட எரிபொருளுக்குப் பதிலாக 100% தூய எரிபொருளைத் தேர்வு செய்யும் உரிமையை நுகர்வோருக்கு வழங்கக் கோரி 'E20 ஜனதா கட்சி' (E20 Janta Party) எனும் பெயரில் இணையவழிப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பானது 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' அமைப்பின் பிரசாரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
எத்தனோல் கலக்கப்பட்ட எரிபொருளுக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், நுகர்வோர் உரிமையின் அடிப்படையில் 100% தூய எரிபொருளை தனியாகத் தேர்வு செய்யும் வாய்ப்பை எரிபொருள் நிலையங்களில் வழங்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை,குறித்த அமைப்பானது E20 எரிபொருள் பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி டாக்சி, சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைப்பாளர்கள் சங்கம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
ஜப்பானின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Local
28 July 2026
பன்முகப் போக்குவரத்து மையங்களை நிர்வகிக்க புதிய நிறுவனத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
Local
28 July 2026
இலங்கைக்குப் பெருமை சேர்த்த செனீசா:சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வான இலங்கை மாணவி
Local
28 July 2026
பந்துவீச்சை விமர்சிக்கும் துடுப்பாட்ட வீரர்கள் - கொதித்தெழுந்த உஸ்மான் தாரிக்
Local
28 July 2026
பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி!
Local
28 July 2026
90 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மர்ம மரணம் - மரபணு தொழில்நுட்பம் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
Local
28 July 2026
எல் நினோ தாக்கம்: குடிநீர் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
Local
28 July 2026
ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் சமந்தாவின் கர்ப்பகால தோற்றம் : இணையத்தில் வைரலாகும் புதிய காணொளி!
Local
28 July 2026
இலங்கை வம்சாவளி இளைஞருக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை!
Local
28 July 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிக்கப்பட்டது ஏன்? - நீதி அமைச்சர் விளக்கம்
Local
28 July 2026