International28 July 2026

கரப்பான் பூச்சிக்கு பிறகு E20 : அடுத்தடுத்து வரும் புதிய அமைப்புகள் காரணம் என்ன?

எத்தனோல் கலக்கப்பட்ட எரிபொருளுக்குப் பதிலாக 100% தூய எரிபொருளைத் தேர்வு செய்யும் உரிமையை நுகர்வோருக்கு வழங்கக் கோரி 'E20 ஜனதா கட்சி' (E20 Janta Party) எனும் பெயரில் இணையவழிப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பானது 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' அமைப்பின் பிரசாரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

எத்தனோல் கலக்கப்பட்ட எரிபொருளுக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், நுகர்வோர் உரிமையின் அடிப்படையில் 100% தூய எரிபொருளை தனியாகத் தேர்வு செய்யும் வாய்ப்பை எரிபொருள் நிலையங்களில் வழங்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை,குறித்த அமைப்பானது E20 எரிபொருள் பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி டாக்சி, சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைப்பாளர்கள் சங்கம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes