General28 July 2026

உடனடி உணவுச் சந்தையில் புதிய களம்: வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்

இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக பிராண்டான வெண்டிஸ் (Wendy's) உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தனது நுகர்வோர் உணவுத் தயாரிப்புத் தொகுப்பை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கிறது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது வெண்டிஸ் உணவகம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்படவுள்ளது.

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் உடனடி உணவுச் சந்தையில் (Fast food market) தனது நிலையை வலுப்படுத்துவதும், நுகர்வோருக்கு புதிய மற்றும் உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்    ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்  குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர்.   உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது.  ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர்  தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30)  அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.  படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது.  ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும்  உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார்.  இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர்...
Read more
Hiru TV News | Programmes