பொறுப்புள்ள ஒரு நாடாக தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி, உலகளாவிய வளர்ச்சியின் ஊக்குவிப்பாளராகவும் பங்குதாரராகவும் செயல்படுவோம் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு (Global Development Initiative) தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சீனாவால் முன்வைக்கப்பட்ட இந்த முன்னெடுப்பின் மூலம், உலகளாவிய வளர்ச்சிப் பணிகளை வலுப்படுத்துவதற்கு சீனா கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு வழிமுறைகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு, நடைமுறைப் பூர்வமான முடிவுகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலையற்ற மற்றும் சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், இந்த முன்னெடுப்பின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளதாக வாங் யி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் தரப்பினரும், கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பின் மூலம் எட்டப்பட்ட முடிவுகளை உயர்வாகப் பாராட்டியுள்ளனர்.
மேலும், சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் சீனா வகிக்கும் தலைமைத்துவப் பங்கிற்கு அவர்கள் தமது பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சீனாவுடனான வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Latest News
கம்பளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
Local
29 July 2026
20.6 பில்லியன் டொலரைத் தொட்ட ஐ.பி.எல் வணிக மதிப்பு - முதலிடத்தில் தெறிக்கவிடும் ஆர்.சி.பி!
Local
29 July 2026
தனுஷின் 'ஓம்' படப் பாடலில் அரசியல்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வரிகள்!
Local
29 July 2026
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் யோசனைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
Local
29 July 2026
தனுஷின் அரசியல் பிரவேசம் : பாரம்பரியக் கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியா? - விஜய்யின் ஜோதிடர் கணிப்பால் பரபரப்பு
Local
29 July 2026
12 ஆவது மாடியில் இருந்து பூனையைத் கீழே தள்ளிவிட்ட நபர்: சமூக வலைதளங்களில் கொந்தளிப்பும், வழக்கும்
Local
29 July 2026
நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார் - நாமல் அதிரடி
Local
29 July 2026
தண்ணீர் கொடுப்பது அவமானமல்ல, அது ஒரு கற்றல் அனுபவம் - சூர்யவன்ஷி விவகாரத்தில் அஸ்வின் அதிரடி
Local
29 July 2026
இளையராஜாவை வியக்க வைத்த தெய்வீக அதிர்வலைகள்!
Local
29 July 2026
உலக அரசியலில் எழுச்சி காணும் Gen Z தலைமுறை - நாடுகளை உலுக்கும் இளைஞர்களின் சக்தி!
Local
29 July 2026