அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக நடத்தப்பட்ட "பெரும் தாக்குதல் அலை" நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிவித்துள்ளது.
ஈரானில் அமைந்துள்ள இராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி (Drone) வசதிகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தளங்கள், மற்றும் கடல்சார் திறன்கள் உள்ளிட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) பல இலக்குகளைத் தங்களது படைகள் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள், சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் அண்டை வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைப்பதே இந்தத் தாக்குதல்களின் முதன்மை நோக்கம் என சென்ட்காம் விவரித்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் தற்போது பணியில் உள்ள 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மிகுந்த விழிப்புடனும், தாக்குதல் திறனுடனும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் ஆயத்த நிலையிலும் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.
Latest News
காஸா ஆயுதக் களைவு ஒப்பந்தம்: டொனால்ட் டிரம்பின் முக்கிய அறிவிப்பு
Local
31 July 2026
பாகிஸ்தானில், நிலக்கரி சுரங்க விபத்து: 11 பேர் பலி
Local
31 July 2026
கெஷ்ம் மரணங்களுக்கு அமெரிக்கா, விலை செலுத்திவேண்டியிருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்!
Local
31 July 2026
போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை: விரைந்தது நேட்டோ
Local
31 July 2026
மூன்று முக்கிய கடல் வழிகளில் ஏற்பட்ட தடையால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஆபத்து
Local
31 July 2026
ஸ்பெயினின் தியூட்டா பகுதிக்குள் குடியேறுபவர்கள் பெருமளவு வருகை: மனிதநேய மற்றும் பாதுகாப்பு நெருக்கடி என தலைவர் எச்சரிக்கை!
Local
31 July 2026
இந்தியாவில் முன்பதிவில் புதிய சாதனை படைத்தது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' – முதல் நாளிலேயே ₹45 கோடி வசூல்!
Local
31 July 2026
அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஈரானிய புரட்சிக்கர காவல் படை!
Local
31 July 2026
ஃபிஃபா தொடர்களை புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் தீர்மானம்!
Local
30 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: தேசிய பாதுகாப்பை கருதி சாட்சிய விவரங்களை வெளியிடத் தடை
Local
30 July 2026