International04 August 2026

ஈரான் விடயத்தில் ட்ரம்ப்பின் அடுத்த நகர்வு என்ன?

ஈரானுடனான மோதல் தொடரும் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உண்மையான நோக்கம் அல்லது திட்டங்கள் என்னவென்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளதாக மத்திய கிழக்கு நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஜேசன் கேம்ப்பெல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் குறிப்பிடும் 'நல்ல ஒப்பந்தம்' (Good document) என்பது எதனைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவர் பழைய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் திரும்ப விரும்புகிறாரா அல்லது கடற்படை முற்றுகையை நீக்கி ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முயல்கிறாரா என்பதில் தெளிவில்லை.

ட்ரம்ப் விதிப்பது உண்மையான இறுதி எச்சரிக்கையா அல்லது வெறும் அச்சுறுத்தலா என்பதில் சந்தேகம் நீடிப்பதாக ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி மற்றும் பெலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் போன்ற மூலோபாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ஹோர்முஸ் நீரிணையில் இயல்பு நிலையைக் கொண்டுவரவும் வெள்ளை மாளிகை தொடர்ந்தும் ராணுவத் தாக்குதல்கள் அல்லது தாக்குதல் அச்சுறுத்தல்களையே நம்பியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes